தெலங்கானாவில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் பலியாகினர்.தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் ரியாக்டர் வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இரண்டு பேர் பலியாகினர். ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். ஏழு பேர் லேசான காயங்களுடன் தப்பினர்" என்று தெரிவித்தார்.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், இந்த நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.தில்லியில் முதியவா் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை: தாய் - மகன் உள்பட 3 போ் கைதுTwo people were killed in an explosion at a pharmaceutical plant in Telangana on Friday night.