ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை நீடிப்பு

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை காலை நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து பரிசல் இயக்குவதற்கான தடை 7 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.கேரளம், கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த பருவமழை குறைந்ததை அடுத்து, கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.இதனால் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை 10,000 கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை 10,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 7 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐவா் பாணி, ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.Water inflow to Hogenakkal rises to 12,000 cusecs; ban on coracle operations extendedஅரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப்பண்பு இல்லாததே காரணம்: பழனிவேல் தியாகராஜன்