‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம். பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். அனைவருக்குமான சமத்துவமே நம்முடைய இலக்கு. மகாபலியை தோற்றவராகக் கொண்டாடாமல், மக்களின் மனதில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வடிவமாகத் திகழ்ந்த மன்னராகக் கொண்டாடலாம். மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.മണ്ണും മനുഷ്യരും ഒന്നായി ജീവിച്ച ഒരു കാലത്തിന്റെ ഓർമ്മ പുതുക്കലാണ് #ഓണം.ജന്മം കൊണ്ട് ആരും ഉയര്ന്നവരോ താഴ്ന്നവരോ അല്ല. എല്ലാവർക്കും എല്ലാം എന്നതാവട്ടെ നമ്മുടെ ലക്ഷ്യം. മാവേലിയെ വീഴ്ത്തപ്പെട്ടവനായി അല്ല, ജനങ്ങളുടെ ഉള്ളിൽ കുടികൊള്ളുന്ന, സമൃദ്ധിയുടെയും സന്തോഷത്തിന്റെയും മന്നനായി… pic.twitter.com/vVkWbFix7h— M.K.Stalin (@mkstalin) August 26, 2026DMK leader M.K. Stalin has extended Onam greetings, expressing the hope that equality may blossom in the land of Mahabali.