குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநர்கள் இரண்டும் பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து விரைந்து வந்த குளித்தலை போலீசார், விபத்தில் பலியான இரண்டு லாரி ஓட்டுநர்களின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Regarding the head-on collision between two lorries near Kulithalai that resulted in the deaths of the drivers...தெலங்கானாவில் கோர விபத்து: லாரி மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி