நாட்டின் சிறந்த முதல்வர்களாக மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் பெயர்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் கலந்துகொண்ட அபிஜீத் தீப்கேவிடம் ராபிட் ஃபையர் கேள்விகள் கேட்கப்பட்டன.அப்போது இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு, “தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின், கேரளத்தின் பினராயி விஜயன் மற்றும் தில்லியின் அரவிந்த் கேஜரிவால்” என்று அபிஜீத் தீப்கே பதிலளித்தார்.தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக மு.க. ஸ்டாலினும், கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக பினராயி விஜயனும், தில்லியை கல்வியின் சிறந்த மாநிலமாக அரவிந்த் கேஜரிவாலும் மாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.அபிஜீத் தீப்கேவின் கருத்தை விமர்சித்திருக்கும் பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனாவாலா வெளியிட்ட பதிவில், “சிஜேபி-ஐவிட பெரிய மோசடி கும்பலை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அவர்கள் கருத்துபடி நாட்டின் சிறந்த முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால். பின்னர் மக்கள் அவர்களை நிராகரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.M.K. Stalin is the country's best Chief Minister! – Abhijeet dipkeமலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்