எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று (ஆக. 26) முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் மிகவும் பரபரப்பான ரயில்நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள் (லிஃப்ட்), நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எழும்பூரில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோவிலிருந்து வெளியே வரும் பயணிகளில் வழியும் மாற்றம் செய்யப்பட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் 2-ஆம் கட்டமாக, புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த ஜூலை முதல் நடைபெறுகின்றன. சீரமைப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. ஆக.20 முதல் ஆக.24 வரை எழும்பூருக்கு வந்த தஞ்சாவூர் விரைவு ரயில் (எண்: 16866), மங்களூரு விரைவு ரயில் (எண்: 16160), கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடனும், திருச்சியில் இருந்து வரும் ராக்போர்ட் விரைவு ரயில் (எண்:12654) மாம்பலத்துடனும் நிறுத்தப்பட்டன.இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இன்று (புதன்கிழமை - ஆக. 26) முதல் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் பயணத்துக்கு முன்பாக ரயில் புறப்படும் இடத்தை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.Reports indicate that all express trains from Egmore will operate as usual starting today (August 26).