டிஆர்டிஓ-ல் இளநிலை ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர் பணி: பிஇ, எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

Wait 5 sec.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திண்ம நிலை இயற்பியல் ஆய்வகத்தில் காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 625/SSPL/HR/JRF&RA/Rectt/2026-27/Main/01 பணி: JUNIOR RESEARCH FELLOW (JRF)காலியிடங்கள்: 16சம்பளம்: மாதம் ரூ.37,000தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 28-குள் இருக்க வேண்டும்.பணி: RESEARCH ASSOCIATE (RA)காலியிடங்கள்: 7சம்பளம்: மாதம் ரூ.67,000தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம், எம்இ, எம்.டெக் படிப்புடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு 1.9.2026 முதல் 9.9.2026 வரை நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள், பயோடேட்டாவை இணைத்து நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும். நேர்முகத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.WALK-IN-INTERVIEW FOR THE POSITION OF JUNIOR RESEARCH FELLOW JRF, RESEARCH ASSOCIATE The interested and eligible candidates are invited for walk-in-interview for the following position...