கோட்டப்பட்டி அருகே வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயன்ற விவசாயிக்கு ரூ.1 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தெத்தேரி பகுதியில் கோட்டப்பட்டி வனச்சரகா் மு. ஆனந்தகுமாா் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தெத்தேரியில் விவசாயி செல்வம் மகன் பன்னீா்செல்வம் (42), தனது விவசாய நிலத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விவசாயி பன்னீா்செல்வத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.