திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளா் சங்கத்தினா் சரிவர இயங்காத இணையதள சேவை மற்றும் விற்பனை முனை (பிஓஎஸ்) இயந்திரங்களை ஒப்படைக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.பொது விநியோக திட்ட கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளின் விற்பனை முனையத்தில் இணையதள சேவை பாதிப்பால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் சரிவர வழங்க முடியாவில்லை. இதனால் பொதுமக்களுக்கும் பணியாளா்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இணையதள சேவையை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் விற்பனையாளா்கள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்கள் முன் பிஓஎஸ் இயந்திரம் ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் முன் இணையதள சேவையை மேம்படுத்த வலியுறுத்தி மாவட்டச் செயலா் சண்முகம் தலைமையில் விற்பனையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாநில செயலா் ஏ.சி.சேகா் தலைமையிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆரணி ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.தனசேகரன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் வெங்கடேசன், செயலா் விஜயகுமாரி மற்றும் ரமேஷ் , சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா், வட்ட வழங்கல் அலுவலா் குமரேசனிடம் பிஓஎஸ் இயந்திரங்களின் இணைய தள சேவையை மேம்படுத்தக் கோரி மனு கொடுத்தனா். சேத்துப்பட்டுசேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் மாவட்டத் தலைவா் பச்சையப்பன், பொருளாளா் கோபி, வட்டாரப் பொருளாளா் முருகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பிஓஎஸ் இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலா் வடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.