நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியிருந்தது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. டீசர், டிரைலர் கொடுத்த எதிர்பார்ப்பால் இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. மேலும், நடிகைகள் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் என பெரிய நடிகர்கள் பட்டாளமே இருந்ததால் கண்டிப்பாக ஹிட் வாய்ப்பு பெரிதாக இருக்கும் என நினைக்கப்பட்டது. ஆனால், 3 மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைக்கதை மிக மோசமாக இருப்பதாகவும் எந்தக் காட்சியும் சரியாக எழுதப்படவில்லை என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் - 2 திரைப்படத்துக்குப் பின் 4 ஆண்டுகள் கழித்து வெளியாகும் நடிகர் யஷ் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அது ஏமாற்றமாக அமைந்துவிட்டதாக வருத்தப்பட்டு வருகின்றனர். அரசன் படப்பிடிப்பில் அனிருத்... வைரலாகும் விடியோ!The movie Toxic, starring actor Yash, is receiving poor reviews.