மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் கேரள சட்டக் கல்லூரி மாணவி!

Wait 5 sec.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி காஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றுள்ளார்.சட்டக் கல்லூரி மாணவியாகவும், மாடலாகவும் இருந்து வந்த காஸியா, ஞாயிறன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற 52 இறுதிப் போட்டியாளர்களை வென்று இவர் மகுடம் சூடினார். வரும் நவம்பர் மாதம் பியூட்டோ ரிக்காவில் நடைபெறும் 75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Kerala law student wins Miss Universe India title