பொதுத்துறை நிறுவனமான "என்டிபிசி" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 26-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 10/26மொத்த காலியிடங்கள்: 135பணி: Deputy Managerதுறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Electrical - 402. Mechanical - 553. Control & Instrumentation - 40சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் அல்லது அதற்கு இணையான பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்து ற்று மின் திட்ட இயக்கம், பராமரிப்பு பணியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 26.8.2026 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தொடர்பான விபரம் மின்அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால பயன்பாட்டிற்காக கைவசம் வைத்துக் கொள்ளவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காகன கடைசி நாள்: 26.8.2026NTPC Recruitment of Deputy Managers in the disciplines of Electrical, Mechanical and C&Iஇந்துஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பொறியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!