முதல்வர் விஜய் 2029-ல் பிரதமர் ஆவார்! ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணிப்பு?

Wait 5 sec.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தென்மாநிலங்களில் 60 எம்.பி.க்களுடன் நாட்டின் பிரதமர் ஆவார் என்று அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தவெக அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான வெற்றி தொலைக்காட்சி சேனலின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் சிங்காரவடிவேலன் என்பவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இது பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.2029-ஆம் ஆண்டு தவெக கட்சி, தென்மாநிலங்களில் 60 மக்களவை உறுப்பினர்களை வெல்லும். தமிழக முதல்வர், தவெக தலைவர் விஜய் பிரதமர் ஆவார் என்று அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணித்துள்ளதாகக் கூறியுள்ளார்.இதுபற்றி அந்த நேர்காணலில் சிங்காரவடிவேலன் கூறுகையில், தவெக தலைவர், முதல்வர் விஜய் பற்றி, அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் மிக விரிவான பார்வையில் இருக்கிறார். வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியில் தவெக முக்கிய பங்கு வகிக்கும். விஜய் தான் பிரதமர் என்று ஜோதிடர் கணித்துவிட்டார்.மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் தவெக 60 மக்களவைத் தொகுதிகளை வெல்லும் என்று ஜோதிடர் கணித்துள்ளார். வரும் ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் தவெக வலுப்பெறும்.உதாரணமாக, கேரளத்தில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களில் பாதியளவுக்கு கேரளத்தில் உள்ளனர். கேரளம் சின்ன மாநிலம், அங்கே 50 சதவிகிதம் பேர் விஜய் ரசிகர்கள் உள்ளனர் என்றால் தவெக தற்போதே அண்டை மாநிலங்களில் பிரபலமடைந்துவிட்டது.விரைவில் மாநில அமைப்பாளர்களை நியமித்து, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் தவெக விரிவுபடுத்தப்படும். 2028ல், தவெக கேரளத்தில் பெரிய கட்சியாக மாறும். 2029ல் தவெக தென்மாநிலங்களில் உள்ள 60 MP-களை வெல்லும் தவெக தலைவர் விஜய் பிரதமர் ஆவார் - ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணிப்பு pic.twitter.com/KfbShJnhrm— Karthik Ravivarma (@Karthikravivarm) August 25, 2026 தமிழ்நாட்டில் வரும் மக்களவைத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டு 40 எம்பி தொகுதிகளையும் வெல்லும். கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சில தொகுதிகளில் வென்று கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் தவெக வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.தெலங்கானாவில் கவிதாவின் ஆதரவு, ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவு, உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் 50 இடங்களை வெல்வார், இவர்களின் மொத்த எம்.பி. தொகுதிகள் 130 ஆக இருக்கும். இந்தக் கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார், இந்த அணியில் காங்கிரஸ் ஆதரவு அளித்து விஜய் பிரதமராக பதவியேற்பார். இதனை ஜோதிடர் கணித்துவிட்டார், இதுதான் நடக்கப்போகிறது என்று கூறியிருக்கிறார்.இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்Chief Minister Vijay will become Prime Minister in 2029! Astrologer Ricky Rattan Pandit's prediction?