இயக்குநர் அட்லி இயக்கிவரும் ராக்கா திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வில்லியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாகவும் மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.டாக்ஸிக் - ஆன்லைன் விமர்சனங்கள் எப்படி இருக்கின்றன? Reports indicate that actress Aishwarya Lekshmi has joined the cast of the film Raaka, directed by Atlee.