சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமியக்கப்பட்டுள்ளனர்.மண்டல வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர்கள் சிலருக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் பொறுப்பு அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொறுப்பு அமைச்சர்கள்1. அமைச்சர் எஸ். ரமேஷ்திருவொற்றியூர் - மண்டலம்-1மணலி - மண்டலம்-22. அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்மாதவரம் - மண்டலம்-3தண்டையார்பேட்டை - மண்டலம்-43. அமைச்சர் அருண்ராஜ்இராயபுரம் - மண்டலம்-5திரு.வி.க.நகர் - மண்டலம்-64. அமைச்சர் விஜய் பாலாஜிஅம்பத்தூர் -மண்டலம்-7அண்ணாநகர் -மண்டலம்-8தேனாம்பேட்டை -மண்டலம்-95. அமைச்சர் டிகே பிரபுகோடம்பாக்கம் -மண்டலம்-10வளசரவாக்கம் -மண்டலம்-116. அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்ஆலந்தூர் -மண்டலம்-12அடையார் -மண்டலம்-137. அமைச்சர் க. விக்னேஷ்பெருங்குடி -மண்டலம்-14சோழிங்கநல்லூர் -மண்டலம்-15Ministers in charge have been appointed for all 15 zones of the Chennai Corporation to oversee heavy rain preparedness measures.