மிகுந்த எதிர்பார்ப்பு! நாளை சூரியின் மண்டாடி பட இசை வெளியீடு!

Wait 5 sec.

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் இசை நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை, மாமன் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களயும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், சிறப்பு விடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் “மண்டாடி மண்டாடி” பாடலில் இடம்பெற்ற சூரியின் நடனம் பெரும் கவனம் ஈர்த்தது.இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் இசை நாளை (ஆக. 28) வெளியிடப்படும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.இத்துடன், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி “மண்டாடி” படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.சிறை, ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்குக: சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கோரிக்கைthe music for the film "Mandadi," starring actor Soori in the lead role, will be released tomorrow.