சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இந்நிலையில் அதனைக் கவனிக்காத நிலையில் பெண் ஒருவர், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது. அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.Woman dies after falling into a stormwater drain pit in Chennai Anna Nagarகன்னிப் பேச்சு என்ற வார்த்தை வேண்டாம்! பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை!