திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை (ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 நவம்பர் மாத ஒதுக்கீடு கடந்த ஆக. 18-ஆம் தேதி முதல் தொடங்கியது.இந்த நிலையில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, நவம்பர் மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று(ஆக. 24) மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ. 300) நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை(ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாத அறை ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது. The Tirumala Tirupati Devasthanams has announced that the quota of Special Entry Darshan tickets for visiting Lord Venkateswara in November will be released online tomorrow (August 25) at 10 AM.தேவலாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை