பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக முதல்வர் விஜய் அறிவித்ததன் எதிரொலியாக ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தன. விமான நிலையம் திட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.ஏகனாபுரம் கிராம மக்கள் கிட்டத்தட்ட 1200 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பிணை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவக்கிய நிலையில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் ஏகநாதபுரம் போராட்ட களத்திற்கு வருகை தந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தான் ஆட்சிக்கு வந்தால் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் திட்டத்தை செயல்படுத்த மாட்டேன் என உறுதி தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்.முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பினை அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திருவிழா போல ஒன்று கூடிய கிராம மக்களும், பரந்தூர் விமான நிலைய எதிர்த்து போராட்டம் நடத்திய குழுவினரும், பட்டாசு வெடித்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.மேலும் முதல்வர் விஜய்யை வாழ்த்தி வெற்றி கோஷங்களையும் எழுப்பி விமானநிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கு முதல்வர் விஜய்க்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். Parandur airport project dropped Ekanapuram residents celebrateபரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!