தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Wait 5 sec.

தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திருவல்லிக்கேணி காவல்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தனக்கு ரூ. 35 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தவெக உத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பாக 14 நபர்களைக் கைது செய்தது.கைது செய்யப்பட்ட 14 குற்றவாளிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைக்கக் கோரிய மனுக்களைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளூர் காவல்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் பிரதிவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Horse-trading talk to TVK MLA: Supreme Court refuses to stay High Court orderஅதிமுகவிலிருந்து மேலும் 10 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வரவுள்ளனர்! செங்கோட்டையன் பேச்சு