ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வு

Wait 5 sec.

ஆவணி மாத சுப முகூர்த்த நாளையொட்டி, வாழை இலையின் விலை ரூ. 10,000 வரையில் கடுமையாக உயர்ந்துள்ளது.சுபமுகூா்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடா்ந்து புதன்கிழமை ஓணம் பண்டிகை வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.இதனால், வாழை இலையின் விலை கடுமையாக உயர்ந்து, தூத்துக்குடி காய்கறி சந்தையில் சிறிய வாழை இலைக் கட்டு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரையிலும், பெரிய வாழை இலைக் கட்டு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரையிலும் விற்பனையாகிறது. நாட்டுத் தார் ரூ. 1,000-க்கும், செவ்வாழைத் தார் ரூ. 1,400-க்கும் விற்பனையாகிறது.சங்கரன்கோயில் சந்தையில் வழக்கமாக ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான இலைக் கட்டு சனிக்கிழமை (ஆக. 22) ரூ. 3000 வரை விற்பனையானது. சிறிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை, பெரிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை விற்பனை ஆனது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!Aavani Auspicious Day: Price of Banana Leaf Bundles Rises