இந்தியாவையே ஆளும் சக்தி படைத்தவர் விஜய்: அமைச்சர் செங்கோட்டையன்

Wait 5 sec.

இந்தியாவையே ஆளுகிற சக்தி விஜய்தான் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.திருப்பூரில் தவெகவின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்துள்ளேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய்.ஒரு வாரத்துக்கு முன்னர், வட மாநிலத்திலிருந்து சிலர் என்னைச் சந்தித்துப் பேசினர். தமிழக முதல்வர் விஜய்யை போல, அவர்களுக்கும் முதல்வர் கிடைப்பார்களா என்று கேட்டனர். விஜய்யை தவிர வேறு எவராலும் முடியாது என வட மாநிலங்களிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 1967, 1977-க்கு பிறகு 2026-ல் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.தவெக தலைவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறார். இதனால்தான் அவரை தமிழக மக்கள் நேசிக்கின்றனர்.திரையுலகின் உச்சத்தில் வந்தவர். திரையுலகில் அவரை வெல்வதற்கு எவராலும் முடியவில்லை. இன்று அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும்வரையில் அவர்தான் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்கவிருக்கிறார்" என்று தெரிவித்தார்.Cஇன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்CM Vijay has the power to rule all of India, says Minister KA Sengottaiyan