முதல்வர் விஜய் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழியாதது பற்றிய கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “எப்போது தவெகவுக்கு எம்பிக்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ளச் சொல்வோம். எம்பி இல்லாதவர்களை நாங்கள் கூட்டணியில் இணைய வரச்சொல்ல முடியாது. அவர்களுக்கு தற்போது எம்பி கிடையாது. எம்பி இருந்தால் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாத காரணத்தால் தான் இதுவரை முதல்வர் விஜய் ராகுல் காந்தியைப் பிரதமர் என முன்மொழியவில்லையா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் வரட்டும். முதலில் விஜய் அவர்கள் தேர்தலில் 106 இடங்களைப் பிடித்து வென்ற பிறகு முதலில் அவர் போன் செய்தது ராகுல் காந்திக்கு தான். அவர் முதல்வராவதற்கு ராகுல் காந்தியிடம் தான் அவர் ஆதரவு கேட்டார். அவருக்கு ஆதரவாக முதல் கடிதம் காங்கிரஸ் கட்சி தான் கொடுத்து. அதனால், தவெகவின் இன்றைய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்களெல்லாம் அமைச்சராவதற்கு காங்கிரஸின் ஆதரவு முதலில் வந்தது. இல்லையென்றால், அமித் ஷா எல்லோரின் கதையையும் முடித்திருப்பார். இந்நேரம் கட்சியை உடைத்து, அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும். தேர்தல் வரட்டும். விஜய் எப்போதும் குறைவாகவேப் பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாகப் பேசுவார்.Remarks by Congress leader Manickam Tagore regarding Chief Minister Vijay not proposing Rahul Gandhi as the Prime Ministerial candidate.எம்ஜிஆருக்கு பிறகு விஜய்க்காக மக்கள் கண்ணீர் விட்டனர்: அமைச்சர் கீர்த்தனா