100 நாள்களை நிறைவு செய்த கருப்பு திரைப்படம்!

Wait 5 sec.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், அமோக வரவேற்பைப் பெற்றது.இதனால், நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாகி ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த நிலையில், கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாளை நிறைவு செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நீண்ட காலம் கழித்து 100 நாள்களை நிறைவு செய்யும் சூர்யா திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நானும் காத்திருக்கிறேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்actor Suriya's film Karuppu has completed a 100-day run in theaters.