இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரமும் மானிய கோரிக்கை விவாதமும்!

Wait 5 sec.

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.வியாழக்கிழமையில் (ஆக. 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தைக் கடந்து, பல்வேறு விவாதங்கள் நடந்தன.இதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், அமைச்சர்களின் பதிலுரை ஏதுமில்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.இதனால், இன்று (ஆக. 28) நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய 3 துறைகளின் அமைச்சர்களும் பதிலுரை வழங்குவார்கள்.மேலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை! The debate on demands for grants in today's Assembly session