டிஆர்டிஓ-ல் பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!

Wait 5 sec.

மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்கீழ்(டிஆர்டிஓ) செயல்படும் உயர் ஆற்றல் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆக.28-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:அறிவிப்பு எண்.: HEMRL/HRD/Apprentice/2026 - 27/01பயிற்சியின் பெயர்: Graduate Apprenticeதகுதி: 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். உதவித்தொகை : மாதம் ரூ.15,000தேர்வு செய்யப்படும் முறை: பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக கல்வித்தகுதி குறித்த விபரங்களை பதிவு செய்துவிட்டு டிஆர்டிஓ நிறுவன இணையதளம் www.drdo.gov.in விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து The Director,HEMRL, DRDO,PUNE - 411 021 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.8.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.HEMRL invites applications from meritorious Indian nationals for One Year Apprentice Training சென்னை ஐஐடி-ல் வீடியோ எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!