சட்டம் ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம்

Wait 5 sec.

சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து இன்று கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.இன்றைய சட்டப்பேரவையில் உள்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மதுவிலக்குத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று உள்துறை மீதான விவாதம் நடைபெறுவதால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள் குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநிலத்தின் உள்துறை அமைச்சராக முதல்வர் விஜய் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய்யின் பதில் மனு இன்று விசாரணைOpposition parties plan to raise questions regarding law and order issues in the Legislative Assembly today