சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைத்தார்.சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ. 134.50 கோடியில் வாங்கப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்த பின், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார்.இதேபோல், பல்வேறு மாவட்டங்களுக்காக ரூ. 55.58 கோடியில் வாங்கப்பட்ட 120 பேருந்துகள் சேவைகளும் தொடக்கிவைக்கப்பட்டது.இந்த தொடக்க நிகழ்வில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.Chief Minister Vijay flagged off 130 new low-floor AC buses in Chennai!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!