மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.சட்டப்பேரவையில் இன்று(ஆக. 25) இயற்கை வளங்கள் துறை - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை - தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.அவர் பேசும்போது, ”டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று காத்திருக்கின்றனர். மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா” என்றார்.இதற்குப் பதலளித்த நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், ”கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும்” என்றார்.இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, “ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை, இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் நேற்று விளக்கமாக தெரிவித்தார். டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. சாம்பா சாகுபடிக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும். 15 நாள்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாற்றங்கால் பணி மேற்கொள்ளப்படும்” என்றார்.Former DMK Minister Kovi. Chezhian raised a question in the Legislative Assembly regarding when the Mettur Dam would be opened.நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (ஆக. 25)