விடாமல் உற்சாகக் குரல் கொடுத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ருக்மணி வசந்த்!

Wait 5 sec.

சென்னையில் டாக்ஸிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ருக்மணி வசந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்திற்கான முன்வெளியிட்டு நிகழ்வு ஹைதராபாத்தைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஆக. 24) நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன் தாஸ், ருக்மணி வசந்த் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேச, நடிகை ருக்மணி வசந்த் மேடைக்கு வந்ததும் தமிழ் ரசிகர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பினர். உச்ச நடிகர்களுக்கு இணையாக ருக்மணிக்கு ரசிகர்களிடமிருந்து சப்தம் எழுந்தததால் படக்குழுவினரே ஆச்சரியப்பட்டனர். மேலும்,”உங்கள் அன்பைக் கண்டு அழுகையே வருகிறது; நான் பேசட்டுமா?” என ருக்மணி கேட்டதற்குப் பின்பே ரசிகர்கள் உற்சாகக் குரலைக் குறைத்தனர். ஒரு கன்னட நடிகைக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருப்பதால் இனி தமிழ்த் திரைப்படங்களிலும் ருக்மணியை அடிக்கடி பார்க்கலாம் எனத் தெரிகிறது. தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் ஷ்ரேயா? Actress Rukmini Vasanth received a grand welcome when she attended the 'Toxic' event in Chennai.