ஏழைகளின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் விஜயகாந்தின் புகழ் நீடுவாழ்க! மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு இன்று (ஆக. 25) பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று! அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!" என்று பதிவிட்டுள்ளார். ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி… pic.twitter.com/x2epVGxjgC— M.K.Stalin (@mkstalin) August 25, 2026சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். DMK leader M.K. Stalin post on the occasion of Captain Vijayakanth's birthdayடெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!