நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து முதல்வர் விஜய் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:”மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.Chief Minister C. Joseph Vijay has extended birthday wishes to actor and Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder-leader Vijayakanth.நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (ஆக. 25)