கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) தெரிவித்துள்ளது.சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி. பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்னிலையில், மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையிட்டார். முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!The Madras High Court stated on Tuesday (August 25) that the case filed by M.K. Stalin challenging the victory of V.S. Babu in Kolathur would be taken up for hearing.