டாடா கார்களின் விலை வரும் செப்டம்பர் மாதம் முதல் உயர உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வாகனச் சந்தையில் ஹேட்ச்பேக் முதல் பெரிய பிரீமியம் எம்யூவி வரையிலான கார்களைக் கொண்ட டாடா மோட்டர்ஸ் வெற்றிகரமான நிறுவனமாக இன்று வரை திகழ்ந்து வருகின்றது. மின்சார வாகன பிரிவிலும் நெக்ஸ்ன் இவி, பஞ்ச் இவி, சீரா இவி, டியாகோ போன்ற பல்வேறு வகையான வாகனங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை செப்டம்பர் 1 முதல் ரூ. 25 ஆயிரம் வரை உயர உள்ளது. பணவீக்கம், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு, பேட்டரி செலவு அதிகரிப்பு, அந்நிய செலாவணி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பெட்ரோவ், டீசல் மற்றும் எலெக்ரிக் மாடல்களில் சிலவற்றுக்குப் பொருந்தும். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு உயர்வு என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். Tata Motors To Hike Prices Across Its Model Range அமெரிக்கப் பாடகி டோலி பார்ட்டன் காலமானார்! அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி!