காட்டிமிராண்டிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது: ஈரான் மீது நெதன்யாகு விமர்சனம்!

Wait 5 sec.

ஈரானை ஆளும் காட்டுமிராண்டிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவது சந்தேகமே என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார். ஈரானுடனான அமெரிக்காவின் ஒப்பந்தம் தொடர்பான சாத்தியக் கூறுகள் பற்றி இருவரும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.அதுகுறித்துப் பேசுகையில், “ஈரானில் உள்ள காட்டுமிராண்டிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டமுடியும் என்பது சந்தேகமே. நான் உங்களிடம் சொல்கிறேன். அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவே முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவது இஸ்ரேலுக்கு விருப்பமான முடிவாக இல்லை. ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்த நெதன்யாகு, டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விமர்சனம் எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய போரில் அமெரிக்காவும் இணைந்துகொண்டது. ஆனால், போர்நிறுத்தம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் இன்னும் இழுபறி நீடித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.மேலும், ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ஈரானின் பொருளாதாரக் கட்டமைப்பை முழுவதுமாகச் சரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு நெதன்யாகு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி முன்னரே டிரம்ப்பிடம் தெரிவித்ததாகவும், தற்போது அவர் இதனை முன்னெடுப்பது சரியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈரான் மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கையில், ஈரானை மட்டும் குறிவைக்காமல், அவர்களுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஷியா மதகுருக்கள் தலைமையில் நடத்தப்படும் ஈரான் அரசு, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக நெதன்யாகு வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கதுIsraeli Prime Minister Netanyahu has stated that reaching an agreement with the savages ruling Iran is doubtful.நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?