பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்

Wait 5 sec.

”பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெகதான்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) பேசினார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், பாஜகவை கொள்கை எதிரி என விமர்சித்துவிட்டு, தற்போது தவெக அமைதியாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்குப் பதிலளித்து அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:பாஜக அரசை உண்மையாக எதிர்க்கிற ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். கரூர் விவகாரம் மற்றும் ஜன நாயகன் பட விஷயம் போன்ற பிரச்னைகளில் அதிகளவில் அழுத்தங்கள் இருந்தன. நமக்கு எது பலத்தைக் கொடுக்கிறது என்றால், நாம் மக்களுக்கு உண்மையாக உள்ளோம். நாம் அச்சப்பட வேண்டிய அளவுக்கு நமக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. திமுகவுக்குதான் அந்தப் பிரச்னை உள்ளது. அந்தக் கட்சியைச் சார்ந்த ஒவ்வொரு அமைச்சர்களின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகையால் அவர்கள்தான் சமரசம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தலைவரைப் பொறுத்தவரை எந்தவித சமரசமும் இல்லாமல் மாநில உரிமைகளுக்கும், அடையாளத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அருண்ராஜ் தெரிவித்தார்.முதல்வர் விஜய் 2029-ல் பிரதமர் ஆவார்! ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணிப்பு?"TVK is the only party opposing the BJP," said Minister for Medical and Family Welfare Arunraj on Tuesday (Aug. 26).