மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 பச்சிளம் குழந்தைகள் பலியானதாகவும், அதிகபட்சமாக ஒரே நாளில் 10 குழந்தைகள் பலியானதாகவும் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில சுகாதாரத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குழந்தைகளின் இறப்பு தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளரும் துணை முதல்வருமான பேராசிரியர் பிரசஞ்சித் இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில், “ஆகஸ்ட் 12 அன்று மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. அந்த 10 குழந்தைகளில் 8 பேர் மால்டா மாவட்டத்தின் பல்வேறு அரசு சுகாதார மையங்களிலும், தனியார் சிகிச்சை மையங்களிலிருந்தும் மிக மோசமான உடல்நிலையுடன் கொண்டு வரப்பட்டவை” என்று அவர் தெரிவித்தார்.மேலும், ”பலியான 10 குழந்தைகளில் 2 பேர் மட்டுமே எங்கள் மருத்துவமனையில் பிறந்தவை. பலியான குழந்தைகளில் 4 பேருக்கு பிறவி இதயக் குறைபாடும், 2 பேருக்கு சுவாசக் கோளாறும், மற்ற 4 பேருக்கு தீவிர உடல்நலக் கோளாறுகளும் இருந்தன.அதேபோல, மொத்தமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் 60 குழந்தைகளில் 44 பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து மிக மோசமான நிலைமையில் மேல் சிகிச்சைக்காக எங்களின் மருத்துவமனைக்கு அவசர நிலையில் கொண்டு வரப்பட்டனர். மீதமுள்ள 16 குழந்தைகள் எங்கள் மருத்துவமனையில் பிறந்தவை” என்று அவர் கூறினார்.அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்தவுடன் சுகாதாரத் துறை இதனைக் கையில் எடுத்து விசாரித்து வருகின்றது.அரசு உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிற நிர்வாக அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.மருத்துவமனையின் தகவல்களின்படி மஞ்சள் காமாலை, கடுமையான சுவாசப் பிரச்சனைகள் மற்றும் பிறவி இதயக் குறைபாடுகள் போன்ற காரணங்களால் 60 குழந்தைகளும் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை குழந்தைகள் பலியானதற்கு மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்த காரணங்கள் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்காததாகக் கூறப்படுகிறது.இதனால், விரிவான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போன்றவற்றிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அனுப்பும் முறையை சீரமைக்க அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், மாநிலம் முழுவதும் பெருகிவரும் இரண்டாம் நிலை மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களில் வழங்கப்படும் மகப்பேறு கால சிகிச்சை முறைகள், வசதிகள் தொடர்பாக அரசு சரிபார்க்கவுள்ளது. இதன்மூலம், அங்கு பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு அறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தனித்தனியே சுகாதாரக் குழுக்களை அமைத்து சுகாதாரத் துறை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.60 newborns die in a single month at a government hospital!நரேந்திர மோடி மீன் சந்தை: வெள்ளைத் துணியால் பெயர் மூடப்பட்டதால் மீண்டும் சர்ச்சை!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி!