பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி கேட்கப்படாது! ஹிமாச்சல் முதல்வர் அறிவிப்பு!

Wait 5 sec.

ஹிமாச்சலப் பிரதேசத்தில், அடுத்த கல்வியாண்டில் பள்ளிச் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் சாதிகள் கேட்கப்படாது என மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் இன்று (ஆக. 26) நடைபெற்ற பட்டியல் சமூக நல வாரியத்தின் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையேற்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சுகு, சாதி ரீதியான பாகுபாட்டை ஒழிப்பதில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மாநில அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக பள்ளிச் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் சாதி விவரம் குறித்து கேட்கப்படும் பகுதியானது அடுத்த கல்வியாண்டு (2027-28) முதல் நீக்கப்படும் எனக் கூறியுள்ளார்.இருப்பினும், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காகப் பட்டியல் சமூகத்தினர் தங்களின் சாதி விவரங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் எனவும், அரசின் நலத் திட்டங்களை அவர்கள் சிரமமின்றிப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!Himachal CM Sukhu has announced that caste details will not be sought in school admission application forms for the upcoming academic year.