மொத ராத்திரி படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதனை ”நகைச்சுவை விருந்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மொத ராத்திரி’.ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டிருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தையும் இந்தப் படம் பெற்றுள்ளது.இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள்.நகைச்சுவையும் உணர்ச்சிகளும் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது. அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவரது 'ஹீரோ' பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கியிருப்பதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வரவிருக்கின்றன என்று கார்த்தி சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.Don't miss this laughter riot in theatres... #ModhaRathiri is a well written and directed family drama that's filled with comedy and emotions in right mix... Well done debutant director #RajaKaruppasamy and whole new crewSuperbly performed by whole new cast … pic.twitter.com/OxUanjVjMl— karthik subbaraj (@karthiksubbaraj) August 23, 2026ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!Director Karthik Subbaraj, sharing his thoughts on the film Motha Rathiri described it as a "comedy feast."