ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள ஏபிஎச் ஹெல்த்கேர்!

Wait 5 sec.

புதுதில்லி: பல்துறை மருத்துவச் சேவைகளை வழங்கும் ஏபிஎச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ரூ. 34.98 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை நாளை (திங்கள்கிழமை) முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐபிஓ வெளியீடு ஆகஸ்ட் 27 வரை நடைமுறையில் இருக்கும் என்ற நிலையில், நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படும் தற்காலிகத் தேதி செப்டம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், நிறுவனத்தின் பங்குகள் நிஃடி-யில் பட்டியலிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஐபிஓ வெளியீடு மூலம் 34.29 லட்சம் வரையிலான பங்குகள் வெளியிடப்படவுள்ளன. பங்கு ஒன்றுக்கு ரூ. 96 முதல் ரூ. 102 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் மூலம் ரூ. 17 கோடியை நிறுவனத்தின் கடனைப் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ திருப்பிச் செலுத்தவும், ரூ. 5 கோடியைச் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும் பயன்படுத்த ஏபிஎச் ஹெல்த்கேர் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகையை மற்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் செய்வதற்கும், அதன் மூலம் வளர்ச்சியை அடைவதற்கும் பயன்படுத்தப்படும்.ABH Healthcare's Rs 34.98 crore initial public offering will open on Monday.தவறான விளம்பரங்கள் குறித்து உணவு நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்!