அழுத்தமின்றி விளையாடுமாறு அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயினுக்கு மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் சதமும், கேப்டன் ஷுப்மன் கில் அரைசதமும் விளாசி அசத்தினர்.இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அறிமுக வீரராக சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டார். அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள சரண்ஷ் ஜெயினுக்கு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது: டெஸ்ட் கேப் நம்பர் 320 சரண்ஷ் ஜெயினுக்கு வாழ்த்துகள். இந்தியா ஏ மற்றும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். இந்திய அணிக்காக விளையாட உங்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் உள்ள மிகப் பெரிய கனவு. இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். எந்தவொரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.உள்ளூர் போட்டிகளில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். அதேபோல, இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியையும் ஒரு முதல் தர கிரிக்கெட்டாக நினைத்து உங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக அணியில் உள்ள 14 வீரர்களும் உள்ளோம். அழுத்தமின்றி மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்றார்.Senior player Ravindra Jadeja has advised debutant Saransh Jain to play without pressure.டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் புதிய சாதனை!