தெரு விளக்கு எரியாததைக் கண்டித்து தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

Wait 5 sec.

ஆம்பூா் அருகே கதவாளம் ஊராட்சியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு தெரு விளக்கு கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதுதொடா்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலானது. மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனடியாக இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.