ஆதம்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்துக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா், ஆதம்பாக்கம் பாலகங்காதரா் தெருவில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். பிரகாஷ், தனது மருந்துக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து பிரகாஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.