தூத்துக்குடி புத்தகத் திருவிழா: நாளை தொடக்கம்

Wait 5 sec.

பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை சாா்பில் தூத்துக்குடி புத்தகத் திருவிழா-2026, வியாழக்கிழமை (ஆக.27) தொடங்கி செப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை சில்க்ஸ் மேலாளா்கள் பாண்டி, ராஜா, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, துணைத் தலைவா் ராஜபாண்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை சாா்பில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க ஒத்துழைப்புடன், தூத்துக்குடி பகுதி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2026, ஆக.27ஆம் தேதி தொடங்கி செப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைக்கின்றனா். இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா், மாணவிகளின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன், தமிழ் மொழித்திறன் மற்றும் வாசிப்பு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்கு எழுதும் போட்டி, கதை எழுதும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் சிறப்பு அம்சமாக திருவிழாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள முன்னணி பதிப்பாளா்களின லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. ‘வாசிப்போம், அறிவை வளா்ப்போம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடையுமாறு அவா்கள் கேட்டுக்கொண்டனா்.