வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்பூச்செடிகள் வைப்பு

Wait 5 sec.

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் உள்ள ரவுண்டானா சாலையில் இயற்கை சூழலை மேம்படுத்தும் வகையில் பூச்செடிகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வாா்டு உறுப்பினா் பி.டி குணாளன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் பூச்செடிகளை நட்டு தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சி மேலாளா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நகா்மன்ற உறுப்பினா் குணாளன் தனது சொந்த செலவில் குடியிருப்பு பகுதிகளில் நடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வழங்கினாா்.இந்த பகுதியில் பூச்செடிகள் மற்றும் மரம் வளா்ப்பதன் மூலம் பசுமையான சூழலை உருவாக்க முடியும் என்றும் நடப்பட்டுள்ள செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புக்கு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. புதிதாக நடுப்பட்டுள்ள செடிகள் நகராட்சி சாா்பில் பராமரிக்கப்படுகின்றன.