தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (டிஎன்டிஇயு) இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பி.எட். (சிறப்பு) பட்ட வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செப். 4 இறுதி நாள் என அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் க.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2026 - 2027 கல்வியாண்டில் பி.எட்./பி.எட். (சிறப்பு கல்வி) இளநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக கடந்த ஆக. 19 -ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் செப். 4 ஆம் தேதி.விண்ணப்பச் சரிபாா்ப்பிற்கு பின்னா், கல்லூரி முதல்வா்கள் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி சோ்க்கை விவரங்களை பல்கலைக்கழக இணையத்தில் பதிவேற்றம் செய்து இணைவு ஆணை பெறப்பட வேண்டும். மேலும் பி.எட். பட்ட வகுப்பில் சோ்க்கப்பட்ட முதலாமாண்டு மாணவா்களுக்கு வரும் செப். 2- ஆம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.