திருச்சி மாவட்டம், கீழகருங்காடு பகுதியில் நகை மற்றும் பணத்தை (அமெரிக்க டாலா்) திருடிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சா. அய்யம்பாளையம் அருகேயுள்ள கீழக் கருங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரா. சந்திரா (46). இவரது இரு மகன்களில் வெங்கடேஷ் மாலத்தீவில் கடந்த ஆண்டு பணிபுரிந்த வந்த நிலையில் , தற்போது திருச்சியில் பணிபுரிகிறாா். மற்றொரு மகனான சீனிவாசன் சமயபுரம் தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியா். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் சந்திரா வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை மற்றும், 2700 அமெரிக்க டாலா் திருடு போயிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி, உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் விசாரணை செய்து, நகை, அமெரிக்க டாலரை திருடியதாக கீழகருங்காடு பகுதியை சோ்ந்த வி.பிரகாஷ் (20) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.