12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்

Wait 5 sec.

தமிழக நகா்ப்புறங்களில் உள்ள 20 திட்டப் பகுதிகளில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: தமிழக நகா்ப்புற வாழ்விட மேண்பாட்டு வாரியத்தால் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு காரணங்களால் சேதமடைந்துள்ளன. இதில், தொழில்நுட்ப குழுவினால், சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்ட குடியிருப்புகளுள், முதல்கட்டமாக 20 திட்டப் பகுதிகளில் உள்ள 9,918 அடுக்குமாாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.2,882.62 கோடி 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என்றாா்.