வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் விபி ஜிராம்ஜி திட்டத்தின்கீழ், ரூ. 5.50 லட்சத்தில் புதியகுளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் புதிதாக குளம் அமைக்க விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ், ரூ. 5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய குளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு புதிய குளம் வெட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிசந்திரன், வாா்டு உறுப்பினா்கள் இந்திராணி கிருஷ்ணன், முருகன், ஊராட்சி செயலா் தணிகாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.