வால்பாறை (தேயிலைத் தோட்டத்து மக்களின் வாழ்வியல்)

Wait 5 sec.

வால்பாறை (தேயிலைத் தோட்டத்து மக்களின் வாழ்வியல்)- முனைவர் ஜே.ஆர். லட்சுமி; பக். 200; ரூ. 300; கெவின் கார்க்கி பதிப்பகம், சென்னை-600 044. ✆ 98406 06462.இயற்கை எழில் கொஞ்சும், ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படுவது தமிழகத்தின் கோவை மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரத்தில் உள்ள வால்பாறை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது.பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள பறவைகள், விலங்கினங்கள், வால்பாறையில் கொட்டிக் கிடக்கும் அழகு, வால்பாறையைச் சுற்றியுள்ள அணைகள், வேறெங்கும் காணக்கிடைக்காத இருவாட்சிப் பறவைகள், உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத புல் மலை ஆகியவற்றை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.துயரமும் மனதில் ஆறாத ரணமும் கொண்டது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை.வால்பாறையில் தேயிலைத் தோட்டத்துக்கு ஆள் பிடித்து அவர்களைத் கொத்தடிமைகளாக நடத்தும் வழக்கம் குறித்தும் பதிவிட்டிருக்கிறார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் முந்தைய வாழ்க்கை முறை, இப்போதைய வாழ்க்கை முறை ஆகிய இரண்டுக்குமான வித்தியாசங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.அவர்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகள், கொண்டாட்டங்கள், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலைத் தொழிலாளர்கள் வால்பாறையில் வசிக்கும் நிலை குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.வால்பாறைப் பகுதியில் காணப்படும் மூலிகைச் செடிகளும் அதன் பயன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறையின் நுழைவிடத்தில் ஆங்கிலேயரான கார்வர்மார்ஸ் சிலையும் பல்வேறு கோயில்கள் குறித்த விவரங்களும் விளக்கப்பட்டுள்ளது.வால்பாறையை சுற்றுலாத் தலமாக்கினால் இயற்கை வளங்கள், விலங்குகள், இங்கு வாழும் மனிதர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என ஆசிரியர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.